பரம்பிக்குளம் அணையின் மதகு உடைப்பு.. ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் ஒரு மதகு கழன்று விழந்ததால், அதிகளவில் தண்ணீர் வெளியேறி சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் ஒரு மதகு கழன்று விழந்ததால், அதிகளவில் தண்ணீர் வெளியேறி சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணையிலிருந்து வரும் உபரி நீர் சேடல் அணை, துணைக்கடவு வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வரும். இந்த அணை 71 கன அடி உயரம் கொண்டது.
மேலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், சாலக்குடிநீர் வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் அணையில் மூன்று மதகுகளில், நடுவில் இருந்த மதகு கழன்று விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டது.
மேலும் படிக்க:மக்களே கவனத்திற்கு !! இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்.. இதற்கெல்லாம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்
இதனிடையே அணையில் உடைந்த ஷட்டர்களை சரி செய்து நீர் வெளியேறுவதைத் தடுப்பது என்பது தற்போது பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையில், பெரிங்கல்குத்து அணையின் மதகுகளும் திறக்கப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறி சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வரும் தண்ணீர் தான், கோவை நகர் மக்களுக்கும் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.
மேலும் படிக்க:தீபாவளி பண்டிகை அதிக வசூல் புகார்.. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்.. எப்படி தெரிந்துக் கொள்ளுவது..?
மதகுகள் தாமாக திறந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆறுகளில் மீன் பிடித்தல், சுற்றுலா படகுகளை இயக்குதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகம் மற்றும் கேரளா பொதுத்துறை அதிகாரிகள், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவை கட்டுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.