MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குடும்ப தலைவிகளுக்கு குட்நியூஸ்.! அக்கவுண்ட்டில் ரூ.5000 வரவு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

குடும்ப தலைவிகளுக்கு குட்நியூஸ்.! அக்கவுண்ட்டில் ரூ.5000 வரவு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. இதற்கு மொத்தமாக ரூ. 31.5 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 வரவு வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 11 2026, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மகளிர் உரிமை தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமை தொகை

தமிழக அரசு சார்பாக மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி 1.30 கோடி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பின்பற்றி டெல்லி, புதுச்சேரி, பீகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

26
பொங்கல் பரிசு ரூ.3000
Image Credit : our own

பொங்கல் பரிசு ரூ.3000

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 3,000 வழங்கியது. அதனை பின்பற்றி புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ரேஷன் கார்டுக்கு ரூ. 3,000 ரொக்கம் மற்றும் ரூ. 750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கியது.

Related Articles

Related image1
பிரபல மாடல்களுக்கு நேரடி சவால்! மாஸ் காட்ட வரும் நிசான் டெக்டான்! என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
Related image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்... கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
36
அதிகாலையில் இன்ப அதிர்ச்சி
Image Credit : our own

அதிகாலையில் இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒவ்வொரு குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் அதிகாலையிலேயே ரூ.5000 வரவு வைக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதாவது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உரிமைத் தொகை, தேர்தல் அறிவிப்பு வெளியானால் தடைப்படும் என்பதற்காக மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ. 2,000 சேர்த்து மொத்தம் ரூ. 5,000யை உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் அதிரடியாக செலுத்தியது.

46
புலம்பும் எதிர்கட்சிகள்
Image Credit : magalir urimai thogai

புலம்பும் எதிர்கட்சிகள்

இதனால் திமுகவின் செல்வாக்கு உயர்ந்தது மட்டுமல்லாமல் எதிர்கட்சிகள் அதிர்ச்சியில் புலம்பி தவித்து வருகின்றனர். தோல்வி பயத்தில் முதல்வர் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார் என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

56
புதுச்சேரி முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
Image Credit : Asianet News

புதுச்சேரி முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு

இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வரை பின்பற்றி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டை காரர்களுக்கு 63,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

66
யார் யார் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு
Image Credit : Asianet News

யார் யார் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு

இதைத்தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வழங்கப்பட வேண்டிய தொகைகயும் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 வரவு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி, அவரவர் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. இதற்கு மொத்தமாக ரூ. 31.5 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 வரவு வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
அரசியல்
பெண்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ஆம் வகுப்பு தமிழ்: அதிக மதிப்பெண் பெற 'டாப்பர்ஸ்' கடைபிடிக்கும் குறிப்புகள்
Recommended image2
Now Playing
அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
Recommended image3
Now Playing
பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
Related Stories
Recommended image1
பிரபல மாடல்களுக்கு நேரடி சவால்! மாஸ் காட்ட வரும் நிசான் டெக்டான்! என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
Recommended image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்... கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved