MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குஷியில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்... கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

குஷியில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்... கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழக அரசு மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், கடன் உதவி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மின்சார ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

3 Min read
Author : vinoth kumar
Published : Mar 10 2026, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மகளிருக்கு பல்வேறு திட்டங்கள்
Image Credit : tndipr

மகளிருக்கு பல்வேறு திட்டங்கள்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதும் பொதும் என்று சொல்லும் அளவுக்கு மகளிருக்கு பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.30 கோடி பெண்களுக்கு மாதம் 15ம் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டமானது பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளை உறுதி செய்த பெரும் பயனுள்ளதாக உள்ளது.

28
விடியல் பயண திட்டம்
Image Credit : Google

விடியல் பயண திட்டம்

விடியல் பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் உட்பட அனைத்து பெண்களுக்கும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் திட்டமானது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண் மாதம் 1000 ரூபாய் வரை மிச்சப்படுத்தப்படுகிறது.

Related Articles

Related image1
அப்பாடா... 100 டிகிரி கொளுத்து வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. குளு குளு அப்டேட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Related image2
எடப்பாடி முதுகில் குத்திவிடுவார்..! பிரேமலதாவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே SP வேலுமணி தான்.! உண்மையை போட்டுடைத்த விஐபி.!
38
கூட்டுறவு வங்கியில் கடன் உதவி திட்டங்கள்
Image Credit : Google

கூட்டுறவு வங்கியில் கடன் உதவி திட்டங்கள்

இதேபோல் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு நிதி சேவைகளை அளிக்கும் ஒரு முக்கிய மூலமாக உள்ளன. இவை முதன்மையாக விவசாயிகள், சிறு தொழிலாளர்கள், தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. விவசாய கடன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படுகிறது. மேலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு நிதி உதவியாக கடன் வழங்கப்படுகிறது. அரசு சார்பில் வட்டி மானியத்துடன், குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுகின்றன.

48
இலவச தையல் இயந்திரம்
Image Credit : Asianet News

இலவச தையல் இயந்திரம்

ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் மூலம் பெண்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரும் உதவியாக உள்ளது.

58
திருமண உதவி திட்டங்கள்
Image Credit : Asianet News

திருமண உதவி திட்டங்கள்

திருமண உதவித்திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. உயர் கல்வி முடித்த பெண்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதே போல அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி தொகை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படு வருகிறது. மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

68
மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன்
Image Credit : SCH

மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன்

இந்நிலையில் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில் மின்சார ஆட்டோ வாங்க, மகளிருக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்படுகின்றன.

இந்த திட்டம் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கவும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது, மேலும் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும், குறிப்பிட்ட வருமான வரம்புக்குள் இருக்க வேண்டும்.

78
கடன் பெற தகுதி விவரங்கள்
Image Credit : google

கடன் பெற தகுதி விவரங்கள்

இந்நிலையில் தனிநபருக்கும் வாகன கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் ரூபாய் கடன் பெற தகுதி விவரங்கள்

தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தின் கடன் தகுதி

பயனாளி: பெண்கள் மட்டும் (குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.).

வயது வரம்பு: 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

88
ஆவணங்கள்
Image Credit : Google

ஆவணங்கள்

ஆதார் அட்டை.

ரேஷன் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை அல்லது முகவரி சான்று.

வருமானச் சான்றிதழ்.

வங்கிக் கணக்கு விவரங்கள்

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

கடன் பெற கூடுதல் தகவல்கள்

விண்ணப்பதாரர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

கடன் விவரங்கள்:

கடன் தொகை: அதிகபட்சம் ரூ.3 லட்சம்.

வட்டி விகிதம்: கூட்டுறவு வங்கிகளின் குறைந்த வட்டி விகிதம் (பொதுவாக 7-10% வரை இருக்கலாம்).

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கூட்டுறவு வங்கியை அணுகவும் அல்லது தமிழ்நாடு கூட்டுறவு துறை இணையதளமான https://rcs.tn.gov.in ஐப் பார்க்கவும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
பெண் அதிகாரம்
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அப்பாடா... 100 டிகிரி கொளுத்து வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. குளு குளு அப்டேட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Recommended image2
Now Playing
கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
Recommended image3
Now Playing
தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
Related Stories
Recommended image1
அப்பாடா... 100 டிகிரி கொளுத்து வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. குளு குளு அப்டேட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Recommended image2
எடப்பாடி முதுகில் குத்திவிடுவார்..! பிரேமலதாவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே SP வேலுமணி தான்.! உண்மையை போட்டுடைத்த விஐபி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved