- Home
- Tamil Nadu News
- திமுகவின் ஓட்டை நிர்வாகம்... மோடி சொன்ன செம ஷாக்..! தமிழகத்தில் எகிறும் NDA கிராப்?
திமுகவின் ஓட்டை நிர்வாகம்... மோடி சொன்ன செம ஷாக்..! தமிழகத்தில் எகிறும் NDA கிராப்?
வளர்ச்சித் திட்டங்கள் ஒருபுறம், அரசியல் தாக்குதல் மறுபுறம் என இரட்டைக்குழல் துப்பாக்கியாக மோடி களம் இறங்குவது, தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழக அரசியல் களம் இப்போது திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஒரு பகுதியில் நின்றுகொண்டே, அதே திமுகவின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அறிக்கை, அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சித் திட்டங்களும்... அரசியல் அஸ்திரங்களும்!
நாளை திருச்சிக்கு வரவுள்ள பிரதமர் மோடி, வெறும் அரசியல் மேடைக்காக மட்டும் வரவில்லை. மாறாக, பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களோடு களம் இறங்குகிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள். சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பு மேம்பாடுகள். முக்கியமாக, கிராமப்புற வளர்ச்சிக்காக 89 ஊரக சாலைத் திட்டங்கள். இந்த வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி, "நாங்கள் சொல்வதைச் செய்கிறோம்" என்ற பிம்பத்தை தமிழக மக்கள் மத்தியில் விதைக்க மோடி திட்டமிட்டுள்ளார்.
எங்கள் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேர்தல் ஆணையத்தால் முறையாக பதிவு செய்து அக்டோபரில் பல பிழை திருத்தம் செய்து பல சட்ட திட்டங்களை பின்பற்றி துவங்கியது. நான் கட்சி ஆரம்பித்து இருக்கிறேன் 234 தொகுதியிலும் போட்டியிட்ட போறேன் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி போல் முட்டாள்தனமாக சொல்லமாட்டேன். இப்போது பவுண்டேஷன் போட்டு இருக்கிறோம் களம் அமைக்க வேண்டும்.
என்னுடைய முக்கியமான கடமை தலைவர் அம்மா வளர்த்த இந்த இயக்கத்தில் அண்ணாவால் ஆட்சிக்கு வந்தோம் இப்படிப்பட்ட இயக்கத்தில் இருந்து தவெக , திமுக செல்லலாம் என்று தினம் தோறும் பல தொண்டர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தன. ஆகவே பலம் இழந்து நிலைதடுமாறிய தொண்டர்கள் அப்படி நின்ற தொண்டர்களை பாதுகாத்து நிறுத்த துவங்கப்பட இயக்கம் ஆகவே பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவேன்.
அதிர்ச்சியில் திமுக மோடியின் அதிரடி அட்டாக்
பிரதமர் மோடி கூறுகையில், ""திருச்சியில் நாளை பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலை, ரயில்வே மற்றும் பல வளர்ச்சி திட்டனங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன். 89 ஊரக சாலை திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளேன். மாலை 6:30 மணியளவில், திருச்சியில் நடக்கும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் கூட்டணி தலைவர்களோடு நானும் இணைகிறேன். என்.டி.எ கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் பிரபலம் அடைந்து வருவதை கண்டு திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
திமுகவின் தவறான நிர்வாகத்தையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். அதனால் தான் என்.டி.எ கூட்டணியின் நம்பிக்கை, முன்னேற்ற திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்தின் ரியாக்ஷன் என்ன?
வழக்கமாக மோடியின் வருகையை 'GoBackModi' ஹேஷ்டேக் மூலம் எதிர்கொள்ளும் திமுக, இந்த முறை மோடியின் நேரடி 'அதிர்ச்சி' புகாரால் சற்றே யோசிக்கத் தொடங்கியுள்ளது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என்ற மோடியின் அஸ்திரம், மக்களிடையே எடுபடுமா என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது.
திருச்சியில் மோடி ஏற்றப்போகும் இந்த அரசியல் அனல், வரும் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் தான். வளர்ச்சித் திட்டங்கள் ஒருபுறம், அரசியல் தாக்குதல் மறுபுறம் என இரட்டைக்குழல் துப்பாக்கியாக மோடி களம் இறங்குவது, தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

