MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருங்க.. விஜய்க்கு எதிராக கொதிக்க தவெக பெண் நிர்வாகி! யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?

பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருங்க.. விஜய்க்கு எதிராக கொதிக்க தவெக பெண் நிர்வாகி! யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?

TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள்.

4 Min read
Author : vinoth kumar
Published : Mar 09 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு
Image Credit : Asianet News

மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு

தவெக விஜய் மீது அவரது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தவெக நடத்திய மகளிர் தின விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல. அதனால், எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம். நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம் என்றார். இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

29
தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம்
Image Credit : our own

தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம்

அதில், தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை" என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?

Related Articles

Related image1
சங்கீதா குறித்து முதல் முறையாக ஒரே வரியில் சொன்ன தவெக விஜய்!
Related image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! குஷியில் இல்லத்தரசிகள்.! காய்கறிகளின் நிலவரம் என்ன?
39
சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும்
Image Credit : Asianet News

சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும்

ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், "வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?

49
"எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான்
Image Credit : x

"எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான்

ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? "எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். "நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன.

59
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே
Image Credit : x/actorvijay

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே

இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? "திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்" என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?

69
 இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா?
Image Credit : Asianet News

இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா?

இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு. அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று, அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு. அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே மனிதநேயத்தின் அடையாளம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை, அவர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், அவர்களையே உங்கள் இடத்திற்கு வரவைத்து இரங்கல் தெரிவித்தீர்கள். இது தான் நம் கலாச்சாரமா? இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா? துயரத்தில் இருக்கும் மனிதர்களிடம் செல்வதே மரபு, அவர்களை அழைத்து வருவது மரபல்ல. அதையும் 'பரவாயில்லை" என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட்டதால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது. ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும். அதனால் தான் நான் கேட்கிறேன் -தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா? அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை கற்றுக் கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் தான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது.

79
கண்ணியத்தை காக்க வேண்டாமா?
Image Credit : Asianet News

கண்ணியத்தை காக்க வேண்டாமா?

எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா? "பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது.

89
மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள்
Image Credit : Asianet News

மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள்

ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் தான் ஒரு தலைமுறையை உருவாக்கும். TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள். நம் மதிப்பையும் மரியாதையும் நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அந்த மரியாதையை உயர்த்தவோ அல்லது மெதுவாகக் குறைக்கவோ செய்கிறது. சரியோ தவறோ அதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது அறிவுடைமை அல்ல.

சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஏனெனில் மௌனம் பல நேரங்களில் ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் நம் மரபையும், நம் மதிப்பையும், நம் மரியாதையையும் காக்க தேவைப்படும் போது குரல் கொடுப்பதே ஒரு பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம் மேலும் ஒரு தலைவனின் பண்பு. தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும் என தெரிவித்துள்ளார்.

99
யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?
Image Credit : our own

யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?

பாஜகவில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார் இருந்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
தமிழக வெற்றி கழகம்
டிவி.கே. விஜய்
அரசியல்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! குஷியில் இல்லத்தரசிகள்.! காய்கறிகளின் நிலவரம் என்ன?
Recommended image2
தமிழகத்தில் போட்டுத்தாக்கும் வெயில்.. இந்த 3 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க.. வானிலை மையம் வார்னிங்!
Recommended image3
Now Playing
Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
Related Stories
Recommended image1
சங்கீதா குறித்து முதல் முறையாக ஒரே வரியில் சொன்ன தவெக விஜய்!
Recommended image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! குஷியில் இல்லத்தரசிகள்.! காய்கறிகளின் நிலவரம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved