MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சங்கீதா குறித்து முதல் முறையாக ஒரே வரியில் சொன்ன தவெக விஜய்!

சங்கீதா குறித்து முதல் முறையாக ஒரே வரியில் சொன்ன தவெக விஜய்!

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 07 2026, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக மகளிர் தின கொண்டாட்டம்
Image Credit : Asianet News

தவெக மகளிர் தின கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் மற்றும் அக்கட்சி பெண் நிர்வாகிகள் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதாவது 60 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.2500, ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

24
30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு
Image Credit : Asianet News

30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறாய், உறுதிமொழிகளை கொடுக்கிறாய். ஆனால், ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என்ற கேள்வி வரும். அதற்கு எளிமையாக ஒன்றை கூறிக் கொள்கிறேன். நம் மாநிலத்துக்கான மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி. அதில், 30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு போகிறது. இந்த பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கும் நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சாருக்கு செல்கிறது. மீதமுள்ள 10 சதவீதம் அவரது அமைச்சருக்கு செல்கிறது. மொத்தம் 30 சதவீதம் ஆகிவிட்டதா? அரசாங்கத்திற்கு தான் வரி கொடுப்பார்கள். அரசாங்கமே ஒருவருக்கு வரி கொடுக்கிறது என்றால், அதற்கு பெயர் ஸ்டாலின் சார் வரி தானே.

Related Articles

Related image1
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு
Related image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.. 6 சிலிண்டர்கள்.. ஒரு பவுன் தங்கம்.. ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிடும் விஜய்
34
ரூ.5000 மக்களுக்கு வழங்கியது எப்படி?
Image Credit : Asianet News

ரூ.5000 மக்களுக்கு வழங்கியது எப்படி?

மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை நீங்கள் அப்படியே சைடில் ஒதுக்காமல், மொத்த பணத்தையும் மக்களுக்கே செலவு செய்துவிட்டால் ஒரு சூப்பரான நல்ல அரசாங்கத்தை கொடுக்க முடியும். அரசிடம் சாசில்லை என்பது பொய். அரசாங்கத்தில் காசு இல்லை காசு இல்லை என்று கூறிவிட்டு விடியற்காலியில் ரூபாய் 5000 மக்களுக்கு வழங்கியது எப்படி. ஸ்டாலின் சார் டாக்ஸை ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும். அரசின் பற்றாக்குறைக்கு ஊழலே காரணம் என்றார்.

44
நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம்
Image Credit : x/actorvijay

நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம்

அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல. அதனால், எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம். நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம். எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது என்றார். தவெக தலைவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கக்கோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
திமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.. 6 சிலிண்டர்கள்.. ஒரு பவுன் தங்கம்.. ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிடும் விஜய்
Recommended image2
Now Playing
பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Recommended image3
Now Playing
60 தொகுதிகளில் செக்...அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!
Related Stories
Recommended image1
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு
Recommended image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.. 6 சிலிண்டர்கள்.. ஒரு பவுன் தங்கம்.. ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிடும் விஜய்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved