தீபாவளி பண்டிகை அதிக வசூல் புகார்.. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்.. எப்படி தெரிந்துக் கொள்ளுவது..?
தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இதுக்குறித்து பயணிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு சார்பில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் அதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை வருவதால், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என்று குற்றசாட்டு எழுந்தது.
மேலும் படிக்க: கவனத்திற்கு !! அரசு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள்..
இந்நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழித்தடத்தில் செல்லும் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது என்றும் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை என்றும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டணம் நிர்ணயம்:
சென்னை - மதுரை - ரூ.690 முதல் ரூ.1940 வரை நிர்ணயம்
சென்னை - திருச்சி - ரூ.520 முதல் ரூ.1470 வரை நிர்ணயம் குறைந்தபட்ச கட்டணம் முதல் அதிகபட்சம் வரை
சென்னை - சேலம் - ரூ.530 முதல் ரூ.1690 வரை நிர்ணயம்
சென்னை - ஊட்டி - ரூ.770 முதல் ரூ.2260 வரை நிர்ணயம்
சென்னை - ஈரோடு - ரூ.610 முதல் ரூ.1710 வரை நிர்ணயம்
சென்னை - மார்த்தாண்டம் - ரூ.1030 முதல் ரூ.3000 வரை நிர்ணயம்
சென்னை - நாகர்கோவில் - ரூ.980 முதல் ரூ.2860 வரை நிர்ணயம்
மேலும் படிக்க:மக்களே கவனத்திற்கு !! இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்.. இதற்கெல்லாம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்
இந்நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அக்டோபர் 21ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், அக்டோபர் 22, 23 தேதிகளில் பயணம் செய்ய நாளையும், நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.