Asianet News TamilAsianet News Tamil

மக்களே கவனத்திற்கு !! இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்.. இதற்கெல்லாம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்


தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெற்று வருகிறது.

1000 fever camps started in 1000 places across Tamil Nadu
Author
First Published Sep 21, 2022, 11:15 AM IST

தமிழகம் முழுவதும் தற்போது H1N1 இன்புளுயன்சா காயச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிபாக இந்த வகை வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சலும் பரவி வருகின்றது.

ஆனாலும் பருவ கால தொற்று நோய்கள் என்பதால் மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் காய்ச்சல் காரணமாக 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அறிவுறுத்தினர். 

மேலும் படிக்க:திமுகவில் இருந்து சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெளியேறியது ஏன்..? அடுத்தது யார்..? ஆர்.பி உதயகுமார் புதிய தகவல்

ஆனால் தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களில் கல்வி பாதிக்கும் என்றும் தமிழகத்தில் விடுமுறை அளிக்கும் அளவிற்கு அச்சமடையும் சூழல் இல்லை என்றும் சுகாதாரத்துறை விளக்கமளித்தது. இந்நிலையில் அதிகரிக்கும் காய்ச்சல் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களிலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் மூன்று நபர்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அங்கு நாளை முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: கவனத்திற்கு !! அரசு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள்..

Follow Us:
Download App:
  • android
  • ios