தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை.. இன்று கடலோர மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Moderate rain 3 days in Tamil Nadu - Today Weather Report

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

21.09.2022 முதல்‌ 23.09.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.09.2022 மற்றும்‌ 25.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:தீபாவளி பண்டிகை அதிக வசூல் புகார்.. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்.. எப்படி தெரிந்துக் கொள்ளுவது..?

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

21.09.2022 முதல்‌ 23.09.2022 வரை:  மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகள்‌, இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றுஅறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பரம்பிக்குளம் அணையின் மதகு உடைப்பு.. ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios