MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்

லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்

Godfather movie : மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 21 2022, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்ததால் தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார் நயன். இவர் கைவசம் இந்தியில் ஜவான், தமிழில் கனெக்ட், தெலுங்கில் காட்ஃபாதர், மலையாளத்தில் கோல்டு ஆகிய படங்கள் உள்ளன.

24

இதில் தெலுங்கில் இவர் நடித்து வந்த காட்ஃபாதர் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது மாரடைப்பு... பிக்பாஸ் பிரபலம் சிகிச்சை பலனின்றி பலி - சோகத்தில் திரையுலகினர்

34

தமிழில் ஜெயம், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும் என ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மோகன் ராஜா தான் காட்ஃபாதர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள முதல் தெலுங்கு படம் இதுவாகும்.

44

இவ்வாறு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்துக்கு தெலுங்கில் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இதன் எதிரொலியாக இப்படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ.57 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. இதுதவிர சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை ரூ.60 கோடிக்கும், திரையரங்க உரிமை ரூ.90 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.207 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... 2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
சல்மான் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகனுக்கு பதிலாக பொங்கல் ரேஸில் குதித்த 4 படங்கள்... அப்போ பராசக்திக்கு ஆப்பு கன்ஃபார்ம்..!
Recommended image2
Actress Sridivya : துளி கூட மேக்கப் போடாம அழகில் அசத்தும் ஸ்ரீவித்யாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள்..!!
Recommended image3
Jananayagan : ஜனநாயகன் வெளிவருமா? சென்சார் வழக்கில் ட்விஸ்ட்... உயர்நீதிமன்றம் கைவிட்டதால் உச்சநீதிமன்றத்துக்கு தாவிய படநிறுவனம்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved