அதையே ஏன் சொல்றீங்க.. திருமாவளவனுக்கு தெரியாதா? ஆ. ராசாவுக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்மல்குமார்!
திராவிட கழக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த விழாவில் பேசிய அவர் நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், நீ பாரசீகனாக இல்லாமல் இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இது போன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அவை இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் ஆகத்தான் இருப்பாய்.
சூத்திரன் என்றால் விபச்சாரியன் மகன் இந்துவாக இருக்கும் வரை உன்னைப் பஞ்சவன் என்றும். நீ இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவனாக தான் இருப்பாய் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாத ஆட்களாக இருக்க விரும்புகிறீர்கள்' என்று பேசினார். ஆ.ராசா பேசிய இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு
திமுக எம்.பி ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையித்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல்குமார், ' லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை விதிகளின் படி, எம்.பி.,க்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்க கோரும் புகார் மனுவை, சபாநாயகரிடம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யலாம். அதை விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால், எம்.பி சஸ்பெண்ட் செய்யப்படுவார். இது தவிர அவர், ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்படும். பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்படும் புகார், விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
அதன்படி திமுக எம்.பி ராசாவை பதவியை நீக்கக்கோரி தற்போது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரமாண பத்திரமாக மனு அனுப்பி உள்ளோம். மனுதர்மம் என்ற புத்தகத்தை 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எழுதி இருக்கிறார்கள். ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில், அவர்கள் வாழ்வதற்காக ஒருசில சட்டதிட்டங்களை அவர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். அந்த புத்தகத்தை யாரோ பின்னாளில் மொழிபெயர்த்து உள்ளார்கள்.
மேலும் செய்திகளுக்கு..ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?
அந்த புத்தகத்தில் உள்ளதை யாராவது இப்போது பின்பற்றுகிறோமோ ? நாம பின்பற்றுவது நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தைதானே ? எதுக்காக 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த புத்தகத்தை எடுத்துட்டு வர்றீங்க ? கண்டிப்பா ஆ. ராசா மீது வழக்கு போடுவோம். மனுதர்ம புத்தகத்தை யாருமே பின்பற்றுவதில்லை என்று பலமுறை நாங்களும் விளக்கம் தந்துவிட்டோம்.
திருமாவளவனும் அன்று பேசி, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது..நுபுர் ஷர்மா அன்று என்ன சொன்னார் ? என் மீது வழக்கு போடுங்கள், நான் பார்த்துக்கறேன் என்றுதானே சொன்னார் ? ஆனால் என்ன நடந்தது ? நாடு முழுவதும், உலகம் முழுவதும் கண்டனம் எழுந்ததே ? அதை மட்டும் ரசித்த மக்கள், ஆ.ராசாவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தால் மட்டும் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்கள்.
மேலும் செய்திகளுக்கு..“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு