ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம்.. வைக்கலாமா, வேண்டாமா? சர்ச்சை கேள்விக்கு அதிரடி பதில்.!
தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுப்பதற்க்கான் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் 421 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், இன்று திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில் , உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடையினையும், சுப்பிரமணியபுரம் ( டிவிஎஸ் டோல்கேட், மின் வாரிய அலுவலகம் அருகில்) நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கினையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் கடந்த மே 24ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகச்சிறப்பாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்
குறிப்பாக அதிக அளவில் திருச்சி மாவட்டத்தில் 6-ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்து பாதுகாக்கத் கூடிய குடோன்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அதவத்தூர் கிராமத்தில் 16-ஆயிரம் மெட்ரிக் டன் அளவு பாதுகாக்கவும்,4-ஆயிரம் மெட்ரிக் டன் இருங்களூர் பகுதியில் பாதுகாக்கவும் குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 20-இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 109 இடங்களில் பாலித்தீன் தார்ப்பாய்கள் கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாக்கப்பட்டு வருகிறது.அவற்றையெல்லாம் குடோன்களுக்கு மாற்றப்படுவதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் 30-இடங்களில் வாடகைக்கு குடோன்கள் எடுத்து நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இவற்றை அரசு தன்னுடைய சொந்த நிதியில் குடோன்கள் கட்டப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் வைப்பு நிதியாக மொத்தம் 67,000 கோடி உள்ளது.இதில் 60,000 கோடி கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கடனாக வழங்கிப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75-இடங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றியமைக்கப்படும்.மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டு அதில் கழிவறை, ஊனமுற்றவர்களுக்காகவும், வயதானவர்களுக்கும் ஏற்ப புதிய ரேஷன் கடைகள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !
தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுப்பதற்க்கான் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் 421 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 SP,12 DSP, 24 ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறிய அளவில் கடத்துபவர்களை விட பெரிய முதலைகளை பிடிப்பதில் கவனம் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை 111 பேர் பெரிய அளவிலான கடத்தலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்திற்க்கு இணையான சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 11,120 பேர் சிறிய அளவில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.2008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உள்ள 3997 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் காலாவதியாகாது.ஒரு வேளை எந்த பொருளும் வாங்காதீர்கள் ரேஷன் கார்டு தேவையென்றால் கௌரவ் குடும்ப அட்டை உள்ளது.அந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுவரை தமிழகத்தில் 60,000 கௌரவ குடும்ப அட்டையை வைத்துள்ளனர். 2,45,000 நபர்கள் ஒரு நபர் குடும்ப அட்டை வைத்துள்ளனர்.இதில் இறந்தவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாமல் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 14,26,145 உள்ளது.இதில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கப்படுவதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்கப்பட வேண்டும் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது என்ற கேள்விக்கு, கடைகளில் பிரதமர் படம் வைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசு இடையே ஒரு வரைமுறை உள்ளது. அதைப் பற்றி தற்போது பேச வேண்டாம்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு