சாத்தான்குளம் தந்தை மகனை காவலர்கள் தொடர்ச்சியாக கடுமையாக தாக்கினர்: தலைமை காவலர் சாட்சியம்!!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் தந்தை மகனை தொடர்ச்சியாக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் அளித்ததை அடுத்து, செப்டம்பர் 23ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் தந்தை மகனை தொடர்ச்சியாக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் அளித்ததை அடுத்து, செப்டம்பர் 23ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க:ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம்.. வைக்கலாமா, வேண்டாமா? சர்ச்சை கேள்விக்கு அதிரடி பதில்.!
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
மேலும் படிக்க:அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு !
வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியபோது, தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தின் போது பணியில் இருந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் சேர்ந்து, தொடர்ச்சியாக தாக்கி, உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தி உயிர்போகும் அளவிற்கு தாக்கியதாக தெரிவித்தார்.
காவலர்கள் தந்தை ஜெயராஜை அடித்தபோது அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர் இருக்கிறது என்று சொல்லி இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், மகன் பென்னிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அப்போது காவலர்கள் அடிப்பதை நிறுத்தியதை பார்த்த ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து காவலர்களைத் திட்டி ஏன் அவர்களை அடிக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி மீண்டும் மீண்டும் அடிக்க சொன்னதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது