மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களின் மீது போலீசார் தடியடி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் கேலரியில் ஏற்பட்ட தகறாறு காரணமாக காவல் துறையினர் பார்வையாளர்கள் மீது தடியடி நடத்தியதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

Share this Video

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேலரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில,மற்றும் சுற்றுலா பார்வையாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஏறாளமான நபர்கள் காயமடைந்தனர்.

Related Video