Asianet News TamilAsianet News Tamil

10ஆயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் நடுவே வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரத்தில் விநாயகர்- பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் நடுவே வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரத்தில் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மகா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

தேங்காய் தோப்புக்குள்- விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இல்லங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது அதன் அடிப்படையில் சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ வாசவி கல்யாண மண்டபத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  குறிப்பாக அமர்நாத் குகையில் விநாயகர் வீற்றிருப்பதை போன்றும்,  கண்ணாடி மாளிகையில் விநாயகர் அமர்ந்திருப்பதை போன்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 43 வது ஆண்டாக  சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு தமிழகத்தின் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தென்னந்தோப்புகள் பத்தாயிரம் தேங்காய்களை  கொண்டும் குறிப்பாக 14 அடியில் தேங்காயை உருவாக்கப்பட்டு தேங்காய் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மஹா கணபதி காட்சி தருவதைப் போல  வடிவமைத்திருந்தனர்.  இந்த தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மஹா கணபதியை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
 

Video Top Stories