Video: கோவில்பட்டி அரசு பள்ளியில் காலை உணவின் தரம் குறித்து ஆட்சியர் அதிரடி ஆய்வு

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் நிலையில், கோவில்பட்டியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் தாசில்தார் சுசீலா நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Video