Asianet News TamilAsianet News Tamil

மது போதையில் அசுர வேகத்தில் இயக்கப்பட்ட லாரி சுங்கசாவடியில் கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் மது போதையில் வேகமாக இயக்கப்பட்ட லாரி நிலக்கரியுடன் சுங்கசாவடியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலஅரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றி கொண்டு தூத்துக்குடியை சேர்ந்த வெங்கட்ராம் என்பருக்கு சொந்தமான டிப்பர் லாரி சென்று கொண்ருந்தது. லாரியை மணிகண்டன் என்பவர் மது போதையில் ஒட்டி சென்றுள்ளார். 

அப்போது, தூத்துக்குடி - மதுரை சாலையில் உள்ள புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தது. குடி போதையில் அதிவேகமாக வந்த லாரி முன்னே நின்று கொண்டிருந்த காரை இடித்து தள்ளியது. அப்போது லாரி நிலை தடுமாறி டோல்கேட்டில் நிலக்கரியோடு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

பின்னர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இது குறித்து புதியம்முத்தூர் உதவி ஆய்வாளர் பாலன் சம்பவ இடத்தில் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

இந்த விபத்து காரணமாக தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் சுங்கச்சாவடியில் இரண்டு கவுண்டர்கள்அடைக்கப்பட்டு இரண்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன மேலும் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் லாரி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories