பல்லடம் அருகே இடி விழுந்ததில் தீ பற்றி எரிந்த காற்றாலை

பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான காற்றாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Video

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பொங்கலூர், கள்ளகிணறு, சித்தம்பலம், கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கனமழை மழை பெய்ய தொடங்கியது.

அப்போது கேத்தனூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை ஒன்றில் இடி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வைரலாக்கி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Video