Viral Video : திருப்பூர் பிரதான சாலையில் மது போதையில் அட்டகாசம் செய்த பெண்மணியால் பரபரப்பு!

காங்கேயம் - திருப்பூர் பிரதான சாலையில் கார் மற்றும் அரசு பேருந்தை நிறுத்தி மது போதையில் அட்டகாசம் செய்த பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Share this Video

காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பிரதான சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களை ஆபாச வார்த்தைகளால் வசை பாடியபடி உள்ளதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக அப்பெண்ணை அப்புற படுத்த முயற்ச்சித்த நிலையில் போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை. அத்துமீறிச் சென்ற போதையால் பெண் அங்கு வந்த காரை நிறுத்தி காரின் சாவியை பிடிங்கி சென்றார். காரின் ஓட்டுநர் சாவியை கேட்டும் தராமல் அடம் பிடித்தார்.மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி அதன் முன்பாக நின்று ரகளையில் ஈடுபட்டார். பின் சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான கூடுதல் போலீசார் அவரை சமாதானம் செய்து லாவகமாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.



போலீசாரின் விசாரணையில் அப்பெண் திருப்பூரைச் சேர்ந்த மகேஷ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இதே பெண்தான் குடிபோதையில் பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின் போலீசார் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Video