கரூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை - போலீஸ் எஸ்பி தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மாவட்ட எஸ்பி சுந்தரவனம் தெரிவித்துள்ளார்.

Share this Video

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பபு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுந்தரவனம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Video