நெய்வேலியில் அரசுப் பேருந்து - தனியார் பேருந்து நேருக்குநேர் மோதல்! - சல்லி சல்லியாக நொறுங்கிய பேருந்து

நெய்வேலியில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
 

Share this Video

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி பொதுத்துறை நிறுவனம் உள்ளது. நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்து டவுன்ஷிப் வரை சாலைப் பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மதுரையில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து மந்தாரக்குப்பம் நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. சாலை பணிகள் காரணமாக ஒரே சாலையில் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இரு பேருந்தின் முன்பக்கம் சல்லி சல்லியாக நொறுங்கியது.

இந்த விபத்தில், பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்கள் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Video