அரசுப்பேருந்தை நிறுத்தி தாக்கிக்கொண்ட மாணவர்கள்; பெண்கள் அலறல்

சிதம்பரம் அருகே அரசு பேருந்தை நிறுத்தி மாணவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில், பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

Share this Video

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகருக்கு பள்ளி, கல்லூரி வருவதற்கு சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான புவனகிரி, காட்டுமன்னார்கோயில், முட்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புவனகிரி வழியாக பூவாலை வரை செல்லும் தடம் எண் 7 அரசு பேருந்து மேலரத வீதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் பேருந்தை நிறுத்தி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பேருந்தில் ஏறி மாணவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது மற்ற மாணவர்கள், மாணவிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Video