தமிழகம் வந்தடைந்தார் ராகுல் காந்தி; மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

தமிழகம் வந்தடைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அக்கட்சி தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Share this Video

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமான மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக உதகை வழியாக வயநாடு செல்கிறார். உதகையில் விண்வெளி வீரர் ராகேஷ்யை சந்தித்து கலந்துரையாடும் ராகுல் காந்தி பின்னர் அங்கு சாக்லேட் தயாரிக்கும் பணிகளை பார்வையிடுகின்றார்.

பின்னர் தோடர் பழங்குடி மக்களுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி பிற்பகலுக்கு பின்னர் வயநாடு செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விமான நிலைய நுழைவாயிலில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Video