VIDEO : ''ஜோசப் விஜய் எனும் தான்'' அரசியலுக்கு வா தளபதி! - போஸ்டருடன் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் வசனங்களுடன் கலைக்கட்டும் பிறந்தநாள் போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
 

Share this Video

"தமிழகத்தை ஆள்வது இரண்டு கட்சிகள் தான் என்ற வரலாற்றை மாற்றி எழுத வா தளபதியே" என வரவேற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் பல இடங்களில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். விஜய் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்கள் போஸ்டர்களில் வித்தியாசமான வசனங்கள் எழுதுவது வழக்கம்.

இந்நிலையில் தாம்பரம் பகுதியில் பல்வேறு இடத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இதில் ''பல கோடி இளைஞர்களின் நம்பிக்கையே தமிழகத்தை ஆள்வது இரண்டு கட்சிகள் தான் என்ற வரலாற்றை மாற்றி எழுத வா தளபதியே'' என்று அவரை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கும் பாணியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Video