தெலங்கானா கனமழை! அணையின் உயரத்தை தாண்டி பாயும் காட்டாற்று வெள்ளம்!

தெலங்கானா மாநிலத்தில் தொடரும் கனமழையால் அணையின் உயரத்தைத் தாண்டி நீர் பாய்கிறது.
 

Share this Video

தெலங்கானா மாநிலத்தில், நிர்மல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து எதிர்பார்த்ததைவிட இரு மடங்கு அதிகமாக வருவதால், கடம் அணையின் உயரத்தைவிட அதிக நீர் இருப்பு உள்ளதால் அவை அணையை தாண்டி பாய்ந்து செல்கிறது. 3.5 லட்சம் கன அடி நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6.04 லட்சம் கனஅடி நீர் வரத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அணையைஒட்டிய கரைப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Video