Asianet News TamilAsianet News Tamil

தனியார் போக்குவரத்துகள் ஸ்டிரைக்; வாகன நெரிசலுக்கு கிடைத்த ஒருநாள் விமோசனம்

பெங்களூருவில் தனியார் பேருந்துகள், ஆட்டோகள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்த “சக்தி” திட்டமானது தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் தனியார் போக்குவரத்துகளான தனியார் பேருந்துகள், ஆட்டோகள், வாடகை கார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இலவச பேருந்து திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தனியார் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Video Top Stories