அடுக்குமொழியில் பாட்டுப் பாடி அதகளப்படுத்திய டி.ராஜேந்தர்- வைரலாகும் பொங்கல் வாழ்த்து வீடியோ

நடிகர் சிலம்பரசனின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர், தன் பாணியில் பாட்டுப்பாடி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share this Video

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனான டி.ராஜேந்தர், தனக்கே உரித்தான பாணியில் அடுக்குமொழியில் பாடல் பாடி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ள டி.ராஜேந்தர், தற்போது மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளதை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Related Video