நேத்து ராத்திரி கூட பேசுனான்... அப்படி என்னடா அவசரம் உனக்கு...! மயில்சாமி மறைவால் கலங்கிப்போன எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Share this Video

நடிகர் மயில்சாமி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளம் வாயிலாக சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் எஸ்.வி.சேகர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் பேசுகையில், நேற்று இரவு கூட மயில்சாமி தன்னிடம் பேசியதாக கூறியுள்ளார். இப்போ 57 வயசு தான் ஆகுது. அவன் 70 - 80 வயசு வரை இருந்திருக்கலாம். அவனது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. சினிமா இருக்கும் வரை, நகைச்சுவை இருக்கும் வரை மயில்சாமி வாழ்ந்துகொண்டு தான் இருப்பார் என்று அந்த வீடியோவில் கலங்கியபடி பேசி உள்ளார் எஸ்.வி.சேகர்.

Related Video