watch : ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் உடன் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பிரபுதேவா - வேறலெவல் வீடியோ இதோ

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து பிரபுதேவா நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

Share this Video

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் பிரபுதேவா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இவர் கைவசம் தற்போது பிளாஷ்பேக், ரேக்ளா உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

ஒரே அரங்கில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து படு ஜோராக நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப்பை பிரபுதேவா அநாயசமாக ஆடி அசத்தும் அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது. ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரபுதேவா இவ்வாறு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Video