மனைவி சைந்தவியுடன் திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் ஜி.வி.

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல  இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் மனைவி சைந்தவி உடன் சாமி தரிசனம் செய்தார்.

Share this Video

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த இடமாகும். அதனால் இங்கு ஆயுள் ஹோமங்கள், 60, 80 வயதுகளில் செய்யப்படும் சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் திருமணங்கள் தினமும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ், ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். 

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சுவாமி சன்னதி, கால சம்ஹார மூர்த்தி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

Related Video