தனுஷின் இனிமையான குரலில் வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட பர்ஸ்ட் சிங்கிள்

விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் முதன்முறையாக பாடி உள்ள ‘ஒன்னோட நடந்தா’ என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

Share this Video

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய்சேதுபதியும், சூரியும் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இன்று விடுதலை படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஒன்னோட நடந்தா’ என்கிற இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் தனுஷ் தான் பாடி இருக்கிறார்.

இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இதுவாகும். இதற்காக இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி எடுத்து இப்பாடலை பாடி உள்ளார் தனுஷ். தற்போது ‘ஒன்னோட நடந்தா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ் பாடல் பாடியபோது எடுத்த காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இப்பாடலை தனுஷுடன் சேர்ந்து பாடகி அனன்யா பட்டும் பாடி இருக்கிறார்.

விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளார் வெற்றிமாறன். அதன்படி இப்படத்தின் முதல்பாகம் வருகிற மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது.

Related Video