ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆக்‌ஷன் காட்சிகள்... அருண் விஜய் நடித்த மிஷன் படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

தமிழில் மதராசபட்டினம், கிரீடம், தெய்வத்திருமகள், சைவம் என பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஏ.எல்.விஜய், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1. இப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். நடிகை எமி ஜாக்சன் ஆக்‌ஷன் ஹீரோயினாக இதில் மிரட்டி இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மிஷன் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் லண்டனில் தான் நடத்தி உள்ளனர். இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் மிஷன் சாப்டர் 1 என்கிற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது. விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிக பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் காட்சிகளை எப்படி படமாக்கினர் என்பதை காட்டி உள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video