ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டி.. வாரிசு படத்தை பிரபலப்படுத்தும் விஜய் ரசிகர்கள்

வாரிசு திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு படத்தை பிரபலப்படுத்தும் வகையில் விஜய் ரசிகர்கள் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.

Share this Video

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 11ஆம் தேதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாரிசு திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வாரிசு திரைப்படத்தின் ஸ்டிக்கர்களை விஜய் ரசிகர்கள் ஒட்டி பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் சதீஷ் தலைமையிலான விஜய் ரசிகர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். அரவக்குறிச்சியில் ஒரே ஒரு திரையரங்கம் உள்ள நிலையில், அதில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related Video