ஏ.ஆர்.ரகுமானின் சர்ப்ரைஸ் டான்ஸ் உடன்... வெளியானது மாமன்னன் படத்தின் ‘ஜிகு ஜிகு ரயில்’ பாடல் வீடியோ இதோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடலான ஜிகு ஜிகு ரயில் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Share this Video

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் தான் அவரின் கடைசி படமாகும். அதனால் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ராசா கண்ணு ரசிகர்கள் மனதை உருக்கும் விதமாக அமைந்திருந்தது. இப்பாடலை வடிவேலு பாடி இருந்தார்.

ராசா கண்ணு பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது மாமன்னன் படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் ஜிகு ஜிகு ரயில் என்கிற பாடலை தான் தற்போது வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்தப்பாடலை பாடி உள்ளார். யுகபாரதி இதன் பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் பாடி உள்ளதோடு இதன் லிரிக்கல் வீடியோவில் நடனமும் ஆடி இருக்கிறார். வைப் செய்யும் பாடலாக இது இருப்பதால் யூடியூப்பில் வைரலாகி வருகிறது.

MAAMANNAN - Jigu Jigu Rail Lyric | A.R Rahman | Udhayanidhi Stalin | Vadivelu | Mari Selvaraj

Related Video