சிவராத்திரி பூஜையில் பங்கேற்பு - மயில்சாமி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ

கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் பங்கேற்ற நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

நடிகர் மயில்சாமி நேற்று இரவு, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். தீவிர சிவ பக்தரான மயில்சாமி, நேற்று நள்ளிரவு 3 மணிவரை அந்த கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்து அவரது கச்சேரியையும் கேட்டு மகிழ்ந்துள்ளார்.

சிவராத்திரி பூஜை முடிந்து வீட்டுக்கு சென்ற மயில்சாமிக்கு அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் நடிகர் மயில்சாமி கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. 

Related Video