ஊழலை சட்டப்பூர்வமாக செய்யலாம் என்ற எண்ணத்தில் பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரகணக்கான கோடி ஊழல் செய்துள்ளதாக எம்.பி.கனிமொழி விமர்சித்துள்ளார்.
பெயர் பலகை இல்லாத பேருந்தை ஓட்டுவது போல் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே இருக்கின்றார் என தேனியில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்தில் திண்டுக்கல் ஐ லியோனி விமர்சனம் செய்தார்.
தேனியில் பிரசாரத்தின் போது, மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று கோஷம் எழுப்பிய மூதாட்டியால் கடுப்பான தங்க தமிழ்செல்வன் தேர்தலுக்கு பின்னர் நானே வந்து பணம் வாங்கி தருகிறேன் என பதில் அளித்தார்.
தேனியில் பிரசாரத்தின் போது 20 வருடமாக சாலை வசதி இல்லை என்று கூறி கேள்வி எழுப்பிய இளைஞரால் ஆவேசமடைந்த தங்க தமிழ்செல்வன் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.
பணம் வழங்குவதாக டோக்கன் கொடுத்து அழைத்து வந்து பிரச்சாரம் முடிந்ததும் திமுகவினர் பணம் வழங்காமல் ஏமாற்றி சென்றதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 1400க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது.
வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த டிடிவி தினகரன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அவர் மீதும், அமமுக நிர்வாகிகள் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாய்ப்பு ஏற்பட்டால் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக எம்.பி.ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லாமல் கள்ள மௌனம் காத்த ஓ.பன்னீர்செல்வத்தை்தை அம்மாவின் ஆன்மா வஞ்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறிய அமைச்சர் மூர்த்திக்கு வெற்றி எங்களுக்கு தான் இன்றே பதவியை விட்டு விலகுங்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Theni News in Tamil - Get the latest news, events, and updates from Theni district on Asianet News Tamil. தேனி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.