தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஊழலையே சட்டபூர்வமாக செய்த கட்சி தான் பாஜக - கனிமொழி விமர்சனம்

ஊழலை சட்டப்பூர்வமாக செய்யலாம் என்ற எண்ணத்தில் பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரகணக்கான கோடி ஊழல் செய்துள்ளதாக எம்.பி.கனிமொழி விமர்சித்துள்ளார்.

bjp did corruption on thousands of crores through electoral bond schemes said mp kanimozhi in theni vel

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி பகுதி அருகே பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலை இல்லா திண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆட்சி அமைத்தார். இதுவரை இரண்டு பேருக்குக் கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. சட்டப்பூர்வமாக ஊழல் செய்யலாம் என்று தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாஜக ஊழல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கட்சிகளின் தேர்தல் பத்திரம் நிதியை ஒருபுறமும், பாஜகவின் தேர்தல் பத்திர நிதியை மறுபுறமும் வைத்தால் முக்கால்வாசி நிதி பாஜகவிடம் தான் இருக்கும்.

பிரசாரத்தின் போது புரோட்டா சுட்டு ஒரே இலையில் சாப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன்

ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு பாஜக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை ஏவி சோதனை செய்கிறது என்றால், அந்த நிறுவனம் அதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த நிறுவனம் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் அந்த நிறுவனத்தின் மீதான வழக்குகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படும். உலகிலேயே இந்தியாவில் உள்ள ஜிஎஸ்டி வரியின் குழப்பம் எந்த நாட்டிலும் இல்லை. ஜிஎஸ்டி வரி படிவத்தில் சிறு தவறு இருந்தால் அதற்கு அவர்கள் விதிக்கும் அபராதத்தை கட்டுவதற்குப் பதிலாக நாம் தொழிலையே மூடிவிட்டு செல்லலாம் அந்த அளவிற்கு அபராதம் விதிக்கின்றனர்.

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களின் உயிர் பறிபோனது பாஜகவின் அரசியல் காரணமாக நடைபெற்றது. என் உயிரை இந்தியாவிற்காக தியாகம் செய்கிறேன் என்று நினைத்து ராணுவத்தில் சேர்ந்த வீரர்களின் உயிரை அரசியலுக்காக பறித்துள்ளது பாஜக. இந்த தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திரப் போராட்டம், நாம் நாட்டை பாதுகாக்க, நம் வீட்டை, நம் வீட்டுப் பெண்களை, நம் மக்களைப் பாதுகாக்க இந்த ஆட்சியை நாம் விரட்ட வேண்டும். பாஜகவில் உள்ள 44 எம்பிகள் மீது பாலியல் குற்ற வழக்குகள் உள்ளன.

மோடி மீண்டும் வெற்றி பெற்றால் நாட்டில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும் - கனிமொழி எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் எனக் கூறியுள்ளது. நாம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆயிரம் ரூபாய் உடன் கூடுதலாக இந்த திட்டம் வரவுள்ளது. தமிழ்நாட்டின் குரலாக ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios