புல்ம்பாதம்மா; உனக்கு பணம் வரலயா? நான் வாங்கி தரேன் - மூதாட்டின் கேள்வியால் கடுப்பான் தங்க தமிழ்செல்வன்
தேனியில் பிரசாரத்தின் போது, மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று கோஷம் எழுப்பிய மூதாட்டியால் கடுப்பான தங்க தமிழ்செல்வன் தேர்தலுக்கு பின்னர் நானே வந்து பணம் வாங்கி தருகிறேன் என பதில் அளித்தார்.
தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களுக்காக உழைக்கும் நான் நீங்கள் ஓட்டு போட்டால் உங்களுக்கு நல்லது செய்வேன்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். அவர் வெற்றி பெற்று சொல்லிய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். அதேபோல் தேனி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு 600 ரூபாய் மிச்சம் ஆகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது 105 அதை 70 ரூபாய்க்கு தருவேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். 35 ரூபாய் மிச்சம் ஆகிறது.
மேடையில் அனல் பறக்க பேசி வாக்கு சேகரித்த எச்.ராஜா; அசதியில் தூங்கி விழுந்த வேட்பாளர்
பெட்ரோல், சிலிண்டர் விலை குறைப்பு, மகளிர் உரிமைத் தொகை என திமுக வெற்றி பெற்றால் மாதம் 5000 ரூபாய் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்களியுங்கள் என்றார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் எனக்கு மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று கேள்வி எழுபினார். அவருக்கு பதில் அளித்த வேட்பாளர், நான் வெற்றி பெற்றதும், நானே உனக்கு உரிமைத் தொகையை பெற்று தருகிறேன் என்றார்.
ஆனால், அந்த மூதாட்டி தொடர்ந்து கேள்வி எழுப்பவே எரிச்சலடைந்த தங்க தமிழ்செல்வன், வாங்கி தரேனு சொல்லிட்டேன், சும்மா புலம்பிட்டே இருக்க கூடாது என்று கடிந்து கொண்டார்.