Asianet News TamilAsianet News Tamil

மேடையில் அனல் பறக்க பேசி வாக்கு சேகரித்த எச்.ராஜா; அசதியில் தூங்கி விழுந்த வேட்பாளர்

செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த பாமக வேட்பாளர் தூங்கிக் கொண்டிருந்த சம்பவத்தால் அதிர்ச்சி.

kanchipuram pmk candidate slep on the stage in chengalpattu vel
Author
First Published Apr 1, 2024, 2:09 PM IST

வருகின்ற 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தேர்தலில் பாமக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேசன் வேட்பாளராக பேட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஜோதிவெங்கடேசனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மைக்குக்காக மேடையில் சண்டையிட்ட திமுக அமைச்சர்கள் 

அப்போது மேடையில் அமர்ந்திருந்த வேட்பாளர் ஜோதிவெங்கடேசன் தூங்கி தூங்கி விழுந்தது பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, திமுகவுக்கு மாற்று பிஜேபி தான். திமுகவும், அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளன. அதிமுக, பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி சென்றது திமுகவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக தான். திமுக கிணத்து தவளை, கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அவர்களுக்கு அடுத்த ஸ்டேஷன் தெரியாது. 

ரிஷிவந்தியத்தில் அதிமுக வேட்பாளரின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா; உணர்ச்சி பெருக்கில் தொண்டர்கள்

இந்து சமூகநீதி கட்சி திமுக என்று சொல்கிறார் ஸ்டாலின். திமுக சமூக நீதி என்றால் இந்து தர்மத்தை, இந்து மதத்தை  அழிப்பேன் என்று சொன்ன உதயநிதி மற்றும் சேகர் பாபு ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios