- Home
- Tamil Nadu News
- காஞ்சிபுரம்
- மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 28 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் இவ்விழாவிற்காக மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.

ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்
பஞ்சபூத ஸ்தலங்கள் என்பது சிவனுக்கு உரிய மிக முக்கிய கோவில்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் தொன்மையான திருக்கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக இந்து அறநிலைத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 16 கோடி ரூபாய் நிதி உபயதாரர்கள் மூலம், வசூலிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.
ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்
அதாவது மொத்தம் ஏகாம்புநாதர் கோயில் திருப்பணிகள் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக ஏகாம்பரநாதர் கோயிலில் பிரதான ராஜகோபுரத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 8ம் தேதி காலை 5.45 மணிக்கு நடைபெறும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 149 பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

