நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மைக்குக்காக மேடையில் சண்டையிட்ட திமுக அமைச்சர்கள்

விழுப்புரத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் இருவரும் ஒருவரை ஒருவர் மைக்குக்காக சண்டையிட்ட காட்சி வைரலாகி வருகிறது.

clash between ministers senji masthan and ponmudi in vilupuram vel

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே பேசத் தொடங்கினார். செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டிருந்த பொழுது அமைச்சர் பொன்முடி உள்ளே வந்தார். அப்பொழுது கட்சிக்காரர் ஒருவர் அமைச்சர் வருகிறார் பேச்சை சற்று நிறுத்துங்கள் என கூறினார். 

ரிஷிவந்தியத்தில் அதிமுக வேட்பாளரின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா; உணர்ச்சி பெருக்கில் தொண்டர்கள்

இதனை கேட்டு கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசி முடித்தவுடன் கடுகடுப்பாக இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசி முடிக்கும் முன்பே அவரது மைக்கை பிடுங்கினார். பிடுங்கியது  மட்டுமில்லாமல் செஞ்சி மஸ்ஸானை கண்டபடி திட்டினார். செஞ்சி மஸ்தான் அவர் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில் அந்த மறுப்பை ஏற்க மறுத்தவர், கடுமையாக அவரை சாடினார். இதில் மேடையில் இருந்தவர்கள் அனைவரும் அதனைப் பார்த்து முகம் சுழித்தனர்.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios