நாகை அருகே மணலூரில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வயல்களில் கிடை போடுவதற்கு ஆடுகளை ஏற்றி வந்த லாரி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக சீடர்களின் பாதங்களை கழுவி திருப்பலி நிறைவேற்றம்:
மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சைக்கிளில், விறகு, மண்வெட்டியுடன் 3 கி.மீ தூரம் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினத்தில் மூக்கு கண்ணாடி எடுத்து வராததால் உறுதிமொழியை படிக்க முடியாமல் திணறிய சுயேட்சை வேட்பாளருக்காக தேர்தல் அலுவலரே உறுதிமொழியை படித்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் மாட்டு வண்டியில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சீர்காழியில் பிரபல ரௌடி திருமணமான சில நாட்களிலேயே தனியார் விடுதியில் மனைவியின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கட்சி டிஜிட்டல் பேனர்களை அகற்றியதால் நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து திமுக நகராட்சி கவுன்சிலரின் கணவர் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையில் பாமக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவேறு சமூகத்தினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு அதிக நிதி வழங்கியபோதிலும் திட்டத்தின் பெயர் மத்திய அரசின் பெயரிலே செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார்.
நாகை அருகே கூத்தூர் தர்கா ஷரீபில் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெறும் ஆபத்து சோறு என்றும் கறி சோறு வழங்கும் விழாவை முன்னிட்டு நாள் முழுதும் சாதி, மத பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு கறி சோறு வழங்கப்பட்டது.
Nagapattinam News in Tamil - Get the latest news, events, and updates from Nagapattinam district on Asianet News Tamil. நாகப்பட்டினம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.