இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியினை ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகமும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.ரூபாயின் மதிப்பு நன்றாகவே உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

12:09 AM (IST) Sep 25
புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்ஃபுளுயன்சா என்ற குளிர் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
12:06 AM (IST) Sep 25
மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:48 PM (IST) Sep 24
குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை படைத்துள்ளது இந்தியா.
10:07 PM (IST) Sep 24
மனைவி ஒருவர் தனது கணவருடன், அவரது முன்னாள் காதலியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
09:06 PM (IST) Sep 24
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.
08:37 PM (IST) Sep 24
‘காவல்துறை திமுக எம்.பி. அ.ராசா பேசியதற்கு போராட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
08:09 PM (IST) Sep 24
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
07:46 PM (IST) Sep 24
சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்
07:13 PM (IST) Sep 24
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். இந்த தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு
07:03 PM (IST) Sep 24
பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது.
06:18 PM (IST) Sep 24
கோயம்புத்தூர் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்
06:13 PM (IST) Sep 24
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
06:10 PM (IST) Sep 24
மதுரை பாரதியார் ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதிக்கு 8 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து குடும்பத்துடன் வ.உ.சி தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படிக்க
06:09 PM (IST) Sep 24
திருப்பதியில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம் முடிந்து இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
05:39 PM (IST) Sep 24
உலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் படிக்க
05:35 PM (IST) Sep 24
20 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
05:19 PM (IST) Sep 24
தேசிய பசுமை தீர்ப்பாயமானது பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திட, திரவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் பெரிய இடைவெளி இருப்பதாக தீர்ப்பாயம் குற்றச்சாட்டியுள்ளது.மேலும் படிக்க
05:02 PM (IST) Sep 24
இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார்.
04:11 PM (IST) Sep 24
மும்பை சென்றுள்ள விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!
03:37 PM (IST) Sep 24
"தங்கமான ராசா" படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது.
அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?
03:07 PM (IST) Sep 24
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில் அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க
03:01 PM (IST) Sep 24
இன்று செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் படிக்க
02:36 PM (IST) Sep 24
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க
02:30 PM (IST) Sep 24
அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலாகி உள்ளதாம். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க
01:58 PM (IST) Sep 24
மத்திய பணியாளர் தேர்வாணையமானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்ற 6,658 விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
01:53 PM (IST) Sep 24
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அந்த திருமணம் வீடியோ விரைவில் ரிலீசாகும் என குறிப்பிட்டு டீசர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்தமாதம் இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
01:17 PM (IST) Sep 24
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
01:03 PM (IST) Sep 24
புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் படிக்க
12:43 PM (IST) Sep 24
கடந்த கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்தும், தற்போது வரை உயர்கல்வி தொடரமால் இருக்கும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.மேலும் படிக்க
12:32 PM (IST) Sep 24
படவாய்ப்பின்றி தவித்து வந்த கூல் சுரேஷுக்கு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர உள்ளதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ் ஹீரோபோல் செம்ம ஸ்டைலிஷாக மாறி, போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
12:15 PM (IST) Sep 24
திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
12:14 PM (IST) Sep 24
திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
12:14 PM (IST) Sep 24
திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
11:53 AM (IST) Sep 24
இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துணிவு படக்குழு பாங்காக் சென்றுள்ளது. அப்போது நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
11:43 AM (IST) Sep 24
தென் மண்டலத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க
11:07 AM (IST) Sep 24
தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க
10:44 AM (IST) Sep 24
வழக்கமாக தீபாவளி என்றால் அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது ஒன்று நிச்சயம் ரிலீசாகும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு மேற்கண்ட நடிகர்களின் படங்கள் ஒன்று கூட ரிலீசாகவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம். மேலும் படிக்க
10:12 AM (IST) Sep 24
மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
09:41 AM (IST) Sep 24
வெந்து தணிந்தது காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் படிக்க
08:36 AM (IST) Sep 24
நடிகை தனுஸ்ரீ, சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க