‘வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ ஹீரோவா போடு’னு சொல்லும் அளவுக்கு.. ஆளே டோட்டலா மாறிய கூல் சுரேஷ்
Cool Suresh : படவாய்ப்பின்றி தவித்து வந்த நடிகர் கூல் சுரேஷுக்கு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர உள்ளதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார்.
பிரசாந்த் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீசான சாக்லேட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். ஆரம்பத்தில் சின்ன சின்ன நெகடிவ் ரோல்களில் நடித்து வந்த இவர், நாளடைவில் காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் கூல் சுரேஷுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தனர்.
இவ்வாறு சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்தும் கூல் சுரேஷுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து சமீப காலமாக இவர் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு விமர்சனம் சொன்னது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... ஏர்போர்டில் பாதுகாப்பு படை வீரரை பார்த்ததும் சல்யூட் அடித்த அஜித்... வைரலாகும் ஏகே-வின் மாஸ் வீடியோ
அதோடு சிம்புவின் தீவிர ரசிகனான இவர், வெந்து தணிந்தது காடு படத்தை கடந்த சில மாதங்களாகவே புரமோட் செய்து வருகிறார். ஒவ்வொரு படம் பார்க்க வரும் போது வெந்து தணிந்தது காடு... வணக்கத்த போடு என இவர் சொல்லும் டயலாக் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. சமீபத்தில் அப்படம் ரிலீசானபோது கூட ரசிகர்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பு முன்னணி நடிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.
அதுமட்டுமின்றி படவாய்ப்பின்றி தவித்து வந்த கூல் சுரேஷுக்கு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர உள்ளதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், ஸ்டைலிஷ்ட் சத்யா என்.ஜே. என்பவர், நடிகர் கூல் சுரேஷை ஹீரோபோல் செம்ம ஸ்டைலிஷாக மாற்றி, அவரை வைத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... வெந்து தணிந்தது காடு சக்சஸ் ஆனதால்... கவுதம் மேனனுக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்