ஏர்போர்டில் பாதுகாப்பு படை வீரரை பார்த்ததும் சல்யூட் அடித்த அஜித்... வைரலாகும் ஏகே-வின் மாஸ் வீடியோ

Ajith : நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் உள்பட துணிவு படக்குழுவினர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பாங்காக் சென்றனர்.
 

Thunivu actor Ajith salute to security force officer in chennai airport viral video

நடிகர் அஜித்தின் 61-வது படம் துணிவு. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெறாமல் இருந்தது. அந்த சமயத்தில் நடிகர் அஜித் வட இந்தியாவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரைடிங் செய்து வந்தார். நடிகை மஞ்சு வாரியரும் இந்த பைக் ட்ரிப்பில் கலந்துகொண்டு, அஜித்துடன் சேர்ந்து பைக் ஓட்டி அசத்தினார்.

துணிவு படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை பாங்காக்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகத் தான் இப்படத்தின் ஷூட்டிங்கும் தடைபட்டு இருந்தது. தற்போது ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டதால் படக்குழு இன்று பாங்காக் சென்றுள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித், விஜய் படங்கள் இல்லாவிட்டாலும்... இந்த ஆண்டு தீபாவளிக்கு மாஸாக ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?

இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துணிவு படக்குழு பாங்காக் சென்றுள்ளது. அப்போது நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடனும் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

குறிப்பாக அதில் ஒரு வீடியோவில் நடிகர் அஜித், விமான நிலையத்திற்குள் நுழையும் போது, பெண் ஊழியர் ஒருவர் அவரது டிக்கெட்டை சரிபார்க்கிறார். அந்த பெண்ணின் பின்னால் ஒரு பாதுகாப்புப் படை வீரர் இருப்பதை பார்த்த நடிகர் அஜித், அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு செல்லும்படியான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தனுஷ், யுவன் குரலில்... நானே வருவேன் படத்தின் ‘ரெண்டு ராஜா’ பாடல் - வைரலாகும் வீடியோ இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios