அஜித்துக்கு வில்லனா? - தீயாய் பரவும் தகவலுக்கு கவுதம் மேனன் கொடுத்த ‘நச்’ விளக்கம்
Gautham Menon : ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில் அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
துணிவு படத்தில் நடித்து முடித்த பின்னர் நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... முன்பதிவு மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா?
இதனிடையே இப்படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட்டும் தொடர்ந்து லீக்கான வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் பரவியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கவுதம் மேனனே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது : “விக்கி என்னுடைய நெருங்கிய நண்பர். நான் அந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளது குறித்து விக்கி இதுவரை என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இனி அவர் கேட்டால், அந்த கேரக்டருக்கு நான் செட் ஆவேனா என்பதை தெரிந்துகொண்டு நிச்சயம் நடிக்க சம்மதிப்பேன்” என கூறியுள்ளார். இதன்மூலம் கவுதம் மேனன் ஏகே 62-வில் வில்லனாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... நகுல் என்னிடம் பேசாததற்கு ரஜினி மகள்களும் ஒரு காரணம்... புது குண்டை தூக்கிபோட்ட தேவயானியின் கணவர் ராஜகுமாரன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.