ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... முன்பதிவு மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா?
Ponniyin selvan : அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலாகி உள்ளதாம்.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் எனும் சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், படத்தின் புரமோஷன் பணிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற படக்குழு இன்று மும்பையில் நடக்க உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளது.
இதையும் படியுங்கள்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்கி - நயனின் திருமண வீடியோ... டீசரோடு நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ரிலீஸ் அப்டேட்
இப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்று மாலை அல்லது நாளை காலையில் முன்பதிவு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில், அமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. அங்கு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கான முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலாகி உள்ளதாம். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஓடிடி-க்கு வரும் விக்ரமின் கோப்ரா எப்ப ரிலீஸ் தெரியுமா?