நகுல் என்னிடம் பேசாததற்கு ரஜினி மகள்களும் ஒரு காரணம்... புது குண்டை தூக்கிபோட்ட தேவயானியின் கணவர் ராஜகுமாரன்
தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன போதும், நடிகை தேவயானியின் தம்பி நகுல், இன்றுவரை அவர்களுடன் பேசாமல் இருந்து வருகிறாராம்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜகுமாரன். சூரியவம்சம் படத்தில் இவர் இணை இயக்குனராக பணியாற்றியபோது அப்படத்தின் நாயகியான தேவயானி மீது காதல் மலர்ந்தது. இதையடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்த ராஜகுமாரன், தான் இயக்கும் படங்களில் தொடர்ச்சியாக தேவயானியை நடிக்க வைத்தார்.
இவர்களது காதல் விவகாரம் தேவயானியின் வீட்டுக்கு தெரிந்ததும், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த 2001-ம் ஆண்டு நடிகை தேவயானியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் ராஜகுமாரன். வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்து நடிகை தேவயானி திருமணம் செய்துகொண்டதாக அப்போது செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையும் படியுங்கள்... ‘வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ ஹீரோவா போடு’னு சொல்லும் அளவுக்கு.. ஆளே டோட்டலா மாறிய கூல் சுரேஷ்
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகை தேவயானி, சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடித்த கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன போதும், நடிகை தேவயானியின் தம்பி நகுல், இன்றுவரை அவர்களுடன் பேசாமல் இருந்து வருகிறாராம்.
நகுல் தங்களுடன் பேசாததற்கான காரணம் குறித்து ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி நகுல், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி நடத்தி வரும் பள்ளியில் தான் பயின்றதாகவும், ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் நகுலின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவித்த ராஜகுமாரன், தேவயானி திருமணம் என்னை செய்தபோது, ரஜினியின் மகள்கள் நகுலை கிண்டல் செய்திருக்க கூடும். அதனை அவமானமாக எண்ணி தான் நகுல் இன்னும் தன்னிடம் பேசாமல் இருப்பதாக தனது யூகத்தை கூறியுள்ளார் ராஜகுமாரன்.
இதையும் படியுங்கள்... ஏர்போர்டில் பாதுகாப்பு படை வீரரை பார்த்ததும் சல்யூட் அடித்த அஜித்... வைரலாகும் ஏகே-வின் மாஸ் வீடியோ