Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா; பீதியில் மக்கள்!!

புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இன்ஃபுளுயன்சா என்ற குளிர் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Swine flu influenza on the rise in Puducherry People in panic
Author
First Published Sep 25, 2022, 12:06 AM IST

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளிடம் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Swine flu influenza on the rise in Puducherry People in panic

இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கிடையே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 பேருக்கு (பெரியவர்கள்) இன்ஃபுளுயன்சா (influenza) என்ற குளிர் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் 7 பேருக்கு தற்போது பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஜிப்மரிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Swine flu influenza on the rise in Puducherry People in panic

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு தெரிவித்துள்ளார். தற்போது புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் குறைந்து வரும் நிலையில் பன்றிக் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios