Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. இந்தெந்த பகுதிகளில் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Will Continuously moderate rain 5 days in Tamil Nadu - Today Weather Report
Author
First Published Sep 24, 2022, 1:16 PM IST

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

24.09.2022 முதல்‌ 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான பெய்யக்கூடும்‌.

27.09.2022 மற்றும்‌ 28.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான பெய்யக்கூடும்‌ பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:அதிர்ச்சி !! உயர்கல்வி தொடராத 8,588 மாணவர்கள்.. என்ன காரணம்..? ஆலோசனை வழங்க அரசு முடிவு..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌
மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌
மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24.09.2022: தென்‌ தமிழககடலோர பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க:புரட்டாசி சனிக்கிழமை தூத்துக்குடி நவதிருப்பதிக்கு அரசு ஆன்மீக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!!

 

Follow Us:
Download App:
  • android
  • ios